ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமம், பள்ளபாளையம், இருகூர் வழி, கோயம்புத்தூர்.


    கோயம்புத்தூருக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பள்ளபாளையம் கிராமம். இங்கு 1946- ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஸ்ரீமத் ஸ்வாமீ சித்பவாநந்த மஹராஜ் அவர்களின் ஆஶியுடன் ஸ்ரீமத் கருணாநந்த ஸ்வாமிகள் ஸ்ரீ ராமகிருஷ்ண சங்கத்தைத் துவங்கினார். 1958 - இல் அது ஸ்ரீ ராமகிருஷ்ண இல்லமாகப் பதிவுபெற்று, பின் 1973-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமமாக செயல்பட்டு வருகிறது. தாய், தந்தை இல்லாத, ஆதரவற்ற 70 குழந்தைகளுக்கு குருகுல முறையில் கல்வி, உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அளித்து அவர்களைப் பராமரித்து வருகிறது. அரசு மற்றும் பல நல்லிதயம் படைத்த அன்பர்கள் உதவியுடன் இப்பகுதியில் இது ஆன்மிக, ஸமுதாய பணிகளை ஆற்றி வருகிறது.
    ஸமுதாயப் பணிகள்:
  1. ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமத்தின் ஸார்பாக தினமும் மகளிருக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  2. கிராமத்து மாணவர்களும் தரமான கல்வி பெறும் நோக்குடன் விவேகாநந்தா கல்வி நிலையம் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
  3. ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமத்தின் ஸார்பில் பிடி அரிசித்திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறது.
  4. இப்பொழுது இந்த ஆஶ்ரமத்தை ஸ்ரீமத் ஸ்வாமீ கேஶவாநந்த மஹராஜ் அவர்கள் நல்ல முறையில் நிர்வஹித்து வருகின்றார்கள்.
    குறிப்பு :- இங்கு குருமஹராஜுக்கு சுமார் 1 கோடி செலவில் ஆலயமொன்று அமைக்கப்பட்டு வருகிறது. 

Comments

Post a Comment